பொன்னமராவதி,மே1: பொன்னமராவதி அருகே ஜெஜெ நகரில் கூரை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம் இவரின் கூரை வீட்டில் திடீரென தீப்பற்றி மல மலவென எரிந்தது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்புத்துறையில் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். ஆயினும் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த தளவாட சாமான்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின. திடீர் என தீப்பற்றி எரிந்த காரணம் குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
