புதுக்கோட்டை, மே.1: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (1ம் தேதி) ஒரு நாள் மட்டும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள்,
உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் மதுக்கூடங்களும் தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகளின்படி மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
