- Vadakalai
- Thenkalai
- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
- காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் வரதராஜர்
- பெருமாள்
- கோவில்
- பெருமாள்
- திருவதார உற்சவம்
- காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை-தென்கலை பிரவினர் இடையே மோதல் தலைதூக்கியுள்ளது. இந்த பிரச்னைக்கு முடிவே இல்லையா? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் திருஅவதார உற்சவம் எனும் பெருமாளின் பிறந்தநாள் விழா உற்சவம் இன்று நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் மூலவர் தேவராஜ சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பெருமாளின் கருவறை மண்ட பத்தில் அமர்ந்து தாதாச்சாரியார் என்னும் வடகலை பிரிவினர் சோஸ்திர பாடல் பாடுவதை வழக்கமாகவும், உரிமை யாகவும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சோஸ்திர பாடல் பாடுவதில் தங்களுக்கும் உரிமை வழங்கவேண்டும் என தென்கலை அய்யங்கார் பிரிவினர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கோயில் கருவறை முன்பு குவிக்கப் பட்டனர். இரு பிரிவினரும் ஆக்ரோஷ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெருமாள் பிறந்த நாளில் பெருமாளின் சோஸ்திர பாடல் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல், பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது. இவர்களின் பிரச்னைக்கு முடிவே இல்லையா? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
