பொன்னமராவதியில் கேழ்வரகு, கம்பங்கூழ் விற்பனை அமோகம்

பொன்னமராவதி, ஏப்.29: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பாரம்பரியமான கேழ்வரகு கூழ் மற்றும் கம்பு கூழ் போன்றவையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்தனர். தமிழகத்தில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. டீ,காபி குடிப்பதை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக்கும் உணவுகளை சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பாரம்பரியமான கேழ்வரகு கூழ் மற்றும் கம்பு கூழ் போன்றவையைகளை நாடிச்செல்கின்றனர். கேழ்வரகு கூழ் குடிப்பதால் வெயில் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது.

இதனால் தான் கிராமங்களில் பாரம்பரியமாக விவசாயிகளை இந்த கேழ்வரகு கூழ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதேபோல கம்பு கூழ் சாப்பிடுவதால் மேலும் உடல் குளிர்ச்சியாகும். இந்த வெயிலின் தாக்கத்திற்காக பொன்னமராவதியில் பல இடங்களில் இந்த கூழ்வகை வியாபாரம் பல இடங்களில் நடக்கின்றது. இப்பகுதி பொதுமக்கள் கேழ்வரகு கூழ் மற்றும் கம்பு கூழ்களை விரும்பி சாப்பிடுகின்றனர்.

 

 

Related Stories: