பொன்னமராவதியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

பொன்னமராவதி, ஏப்.29: பொன்னமராவதியில் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. 2026-2027ம் ஆண்டிற்கான பொன்னமராவதி வழக்கறிஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சங்க தலைவராக ராதாகிருஷ்ணன், செயலாளராக ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக குமார், பிரியதர்ஷினி, பொருளாளராக மகேந்திரன், துணைச் செயலாளர்களாக அன்புக்கண்ணன், தேவிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொன்னமராவதி வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

Related Stories: