சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை!

சென்னை: தங்கத்தின் மீதான ஆர்வம் மத்திய வங்கிகள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அதிலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் பவுனுக்கு ரூ.65 ஆயிரம் வரை அதிகரித்து நகைபிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்ததால் திடீரென தங்கம் விலையானது பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஈரான்- அமெரிக்க போராலும் ஒரு பக்கம் தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை கடந்த 19ம்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20ம்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அந்த வகையில் 23ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.14,160க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280 விற்பனையானது. 24ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கும் விற்றது. 25ம் தேதி கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,200க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனையானது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த நிலையில், வாரத்தின் இறுதி நாள் அதிகரித்து நகைபிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாளும் தங்கம் விலை உயர்ந்து அதிரடி காட்டியுள்ளது. அதன்படி, நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,100க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: