கம்பெனி கம்பெனியா சென்று வேலை கேட்டு வேன்களை திருடிய பலே வாலிபர் கைது

பெரம்பூர்: கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(30). சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ரவி(35) வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், ராஜனுக்கு சொந்தமான டூரிஸ்ட் வேனை இரு தினங்களுக்கு முன் ரவி திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து ராஜன், கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு சுங்கச்சாவடிகள் மற்றும் சிசிடிவி கேமரா உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதில் ரவி வாகனத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று ரவியை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை தனது பெயரை ரவி என மாற்றி ராஜனிடம் வேலைக்கு சேர்ந்து வேனை திருடிச்சென்றது ெதரியவந்தது. பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஏழுமலை அடிக்கடி தனது பெயரை மாற்றி பல்வேறு கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்து வாகனங்களை திருடிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>