×

மேற்கு வங்க இரண்டாம் கட்ட தேர்தல் 142 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட பேரவை தேர்தல் ஏப். 23 ம் தேதி நடந்தது. இந்த நிலையில் வரும் 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தேர்தல் அதிகாரிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அதிகாரி கூறுகையில், வாக்காளர்கள் அச்சமின்றி தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, தொகுதி வாரியாகப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தப்படும். உட்புறச் சந்துகளிலும் பதற்றமான பகுதிகளிலும் பாதுகாப்பு படை வீரர்களின் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திட்டத்தின் ஒரு பகுதியாக, விரைவான செயல்பாட்டிற்காக,160 பைக்குகளில் தலா இரண்டு மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவர் என்றார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், அமைதியான இயல்பான வாக்குபதிவை உறுதி செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கள்ள வாக்கு பதிவோ, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவதோ அனுமதிக்கப்படாது. மக்கள் அச்சமின்றி வாக்கு பதிவு செய்ய வேண்டும். அதை தடுக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : West Bengal ,Election Commission ,Kolkata ,
× RELATED “அறம் கூறும் அரங்கங்கள்’’ என்று...