×

மே.வங்கத்தை குற்றவாளிகள், குண்டர்கள் ஆட்சி செய்கிறார்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 142 பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இதையடுத்து தேர்தலில் நேரடியாக மோதும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. அதன்படி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கின் ஹரிபால் பகுதியில் நேற்று நடந்த பாஜ பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மோடி, “மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் கொடூரமான ஆட்சி நடக்கிறது.

மம்தா பானர்ஜி அரசு மாநில தலைமை செயலகத்தில் இருந்து செயல்படவில்லை. மாறாக, அது குற்றவாளிகளாலும், குண்டர்களாலும் ஆட்சி செய்கிறது. மம்தா பானர்ஜி அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பூஜ்யத்துக்கு சரிந்து விட்டது” என குற்றம்சாடடினார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம போங்கானில் உள்ள தாக்குர் நகரில் மட்டுவா சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, “திரிணாமுல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றவாளிகளுக்கு மம்தா அரசு அடைக்கலம் தருகிறது” என்று தெரிவித்தார்.

* குண்டர் ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்
மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள டெஹாட்டாவில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அமித் ஷா, “சட்டப்பேரவை முதல்கட்ட தேர்தலியே மம்தா ஆட்சிக்கு மக்கள் முடிவு சொல்லி விட்டனர். மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ஆட்சி, சிண்டிகேட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

மாநிலத்தில் மறைந்துள்ள ஊடுருவல்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அதே மாவட்டத்தில் உள்ள ரனாகாட்டில் பேசிய அமித் ஷா, பெரும்பாலான கால்நடைகள் கடத்தல் நாடியா வழியாக நடக்கிறது. இங்கு பாஜ ஆட்சி அமைந்ததும் ஆடு, மாடு கடத்தல்களை தடுக்க சிறப்பு படை அமைக்கப்படும்” என்று கூறினார்.

Tags : West Bengal ,Modi ,Kolkata ,Trinamool Congress Party ,BJP ,Hooghly… ,
× RELATED “அறம் கூறும் அரங்கங்கள்’’ என்று...