- கல்பாக்கம் அணு நிலையம்
- மோடி
- புது தில்லி
- மனாட்டின் குரல் நிகழ்ச்சி
- மனாட் குரல் திட்டம்
- கல்பாக்கம், தமிழ்நாடு
புதுடெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார், பிரதமர் மோடி இன்று வானொலியில் ஒளிபரப்பான 133வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய முன்மாதிரி வேக ஈனுலையில், வெற்றிகரமாக அணுக்கரு வினை தொடர்ச்சியாக நடைபெறும் ‘கிரிட்டிக்காலிட்டி’ நிலையை விஞ்ஞானிகள் எட்டினர். இது இந்தியாவின் அணுசக்தி பயணத்தில் வரலாற்று மைல்கல். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட இந்த அணு உலை, வளர்ந்த இந்தியா என்ற இலக்குக்கு புதிய ஆற்றலை வழங்கும். நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் மே மாதம் வரவிருக்கும் புத்த பூர்ணிமா திருவிழாவிற்காக நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். கவுதம புத்தரின் வாழ்க்கை செய்திகள் இன்றைய உலகளாவிய அழுத்தமான சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. லடாக்கில் பிறந்த துருப்பன் ஓட்சர் ரின்போச்சின் வழிகாட்டுதலில் சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் புத்தரின் கருத்துக்களைப் பரப்பி வருகிறது. அங்குள்ள கோச்சிகுவாஸ் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட ஸ்தூபி அமைதியை வழங்குகிறது. கர்நாடகாவில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பசுமையான கர்மா மடாலயம் சிறப்பானதாக உள்ளது. உலகம் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு மத்தியில், ஒருவரின் உள்ளத்தில் இருந்தே அமைதி தொடங்குகிறது என்ற புத்தரின் சிந்தனைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன’ என்று பிரதமர் பேசினார்.

