புதுடெல்லி: ஆயுத படைகளின் வளர்ந்து வரும் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இரண்டு கவச வாகனங்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் அஹில்யா நகரில் உள்ள டிஆர்டிஓவின் ஆய்வ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டிஆர்டி ஓ தலைவர் சமீர் காமத் இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தினார். கவச வாகனங்கள் மேம்பட்ட திறன்களுடன் கூடிய 30 மிமீ ஆளில்லா சுழல் பீரங்கியைக் கொண்டுள்ளன. இந்த வாகனங்கள் அதிக இயங்குதிறன், தாக்குதல் திறன் மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. இதில் உள்நாட்டு தயாரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதற்கான உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சமீர் காமத் தெரிவித்தார்.
