குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

தஞ்சாவூர், ஏப் 25: குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சை மேல அலங்கம் கயிற்றுக்காரத்தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் வயது (48) இவருடைய மனைவி வனபேச்சி (37). இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்த்து வந்தபோது காதலித்தனர். இதனால் கடந்த 2021-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து தஞ்சைக்கு திரும்பி வந்த சசிக்குமாரும், வனபேச்சியும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகளும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை வனபேச்சியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சசிக்குமார் இரு குழந்தைகளையும் அண்ணியிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவானார்.

இந்த தகவலை அறிந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் குடும்பத்தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.இதையடுத்து வனபேச்சி உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை தேடி வந்தனர்.இந்த நிலையில் சசிக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார்.

 

Related Stories: