பொன்னமராவதி நகர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

பொன்னமராவதி,ஏப்.25: பொன்னமராவதி நகர் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக இன்று காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. கொன்னையூர் துணை மின் நிலையப்பகுதியில் உள்ள பொன்னமராவதி நகர் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக காலை 10மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொன்னமராவதி, புதுப்பட்டி, வலையபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் பகுதியில் மட்டும் மின்நியோகம் இருக்காது என பொன்னமராவதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

 

Related Stories: