×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஃபயரா வென்ற சியரா: 3வது சுற்றுக்கு முன்னேறினார்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் நேற்று, அர்ஜென்டினா வீராங்கனை ஸொலானா சியரா, போலந்து வீராங்கனை மேக்தலீனா ஃபிரெச்சை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவு 2வது சுற்றுப் போட்டி ஒன்றில் அர்ஜென்டினா வீராங்கனை ஸொலானா சியரா – போலந்தின் மேக்தலீனா ஃபிரெச் மோதினர்.

இப்போட்டியின் துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய சியரா, முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய அவர், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதன் மூலம், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் செக் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார். முதல் செட்டில் அநாயாசமாக ஆடிய கரோலினா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார்.  தொடர்ந்து நடந்த 2வது செட்டில் மரியா சுதாரித்து ஈடுகொடுத்து ஆடியதால் டைபிரேக்கர் வரை நீண்டது. கடைசியில் அந்த செட்டை 7-6 (8-6) என்ற புள்ளிக் கணக்கில் கரோலினா வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வென்ற அவர் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags : Sierra ,Madrid Open Tennis Fair ,Madrid ,Madrid Open Tennis Women's Singles ,Solana Sierra ,Magdalena Frech ,Madrid Open Tennis Tournament ,Madrid, Spain… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...