×

பொதுமக்கள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பும் வகையில் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் மோகன் தகவல்

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஒட்டு மொத்தமாக 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்து மேலாண் இயக்குநர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும் வாக்குபதிவு முடித்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பின்னர் இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக இன்று தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 1295 பேருந்துகளும் முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2500 சிறப்பு பேருந்துகளும், நாளை சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2092 பேருந்துகளுடன் 3184 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களுக்கு 3345 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14508 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) 19676 பயணிகளும் நாளை (ஞாயிறு) 47001 பயணிகளும் முன்பதிவு செய்து பயணிக்க உள்ளனர். தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Managing Director ,Mohan ,Assembly ,Government Rapid Transport Management ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்