×

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பலியான விவகாரம் மனித உரிமை ஆணையம் வழக்கு: 2 வாரத்தில் அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி: விருதுநகர் மாவட்டம் கட்டணார்பட்டி பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.  மேற்கண்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஆணையம் பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் அறிக்கையில் இடம்பெற வேண்டியவ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த விவரங்கள், இந்த விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் காவல்துறை விசாரணையின் தற்போதையநிலை, காயமடைந்தவர்களின் தற்போதைய உடல்நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யத் தவறியது மற்றும் உரிய கால இடைவெளியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணம் என தெரிவித்துள்ளது.

Tags : Human Rights Commission ,Virudhunagar ,New Delhi ,Taarirpatti ,Virudhunagar district ,National Human Rights Commission ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்