பேராவூரணி மருத்துவ அலுவலர் தகவல் அதிராம்பட்டினத்தில் வீரனார் கோயில் கும்பாபிஷேகம்

அதிராம்பட்டினம்.பிப்.24: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வீரனார் கோயில் உள்ளது. இக்கோயில் நீண்ட ஆண்டுகளாக பழைய கோயிலாக இருந்து வந்த நிலையில் கோயிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகபூஜை தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கரையூர் கிராம தலைவர் அய்யாவு, உபத்தலைவர் வீரையன், பொருளாளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: