மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை இறுதியில் 1% வரை குறைந்து முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 852 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 77,664 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 205 புள்ளிகள் சரிந்து 24,173 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
