கூடுதல் தேர்தல் விதிமுறைகள் அமல் மீறினால் 2 ஆண்டு சிறை என அறிவிப்பு

 

புதுக்கோட்டை, ஏப். 22: தமிழக சட்டபேரவைக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 15ம்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தனர். இதனை தொடர்ந்து அதிக பணம் கொண்டு செல்வது, பரிசு பொருட்கள் எடுத்து செல்வது பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் வேட்பாளர்களின் மனு தாக்கல் நடைபெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக வேட்பாளர்கள் செலவீன கணக்குகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. மேலும் வேட்பாளர்களின் பிரசாரங்களும் தீவிரமாக தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வந்தது. கடந்த 9ம்தேதி வேட்பாளர் இறுத பட்டியில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரம் தொடங்கி தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்று நேற்றுடன் நிறைவுற்றது.

Related Stories: