- பாஜா
- ஜனநாயகம்
- திருவண்ணாமலை தொகுதி
- அமைச்சர்
- திருவண்ணாமலை அண்ணா சிலை
- வேலு
- அரசுத்தலைவர்
- கம்யூனிஸ்ட்
- இந்தியக் கட்சி
- வீரபாண்டியன்
- தில்லி
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியதாவது: டெல்லி தோற்க வேண்டும், தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை முழக்கத்தோடு முதல்வர் இந்த தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார். தமிழகம் ஒற்றுமைக்கு சிறந்த மாநிலம். அதை பாஜ சிதைக்க பார்க்கிறது.
தொகுதி மறுவரையறை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பாஜ பிடிவாதம் பிடித்தது. இந்த சட்டம் நிறைவேறினால் நாடாளுமன்ற ஜனநாயகம் சிதைந்து விடும் என முதன்முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் தமிழக முதல்வர். சட்ட மறுவரையறை மூலம் ஜனநாயகத்தின் ஒற்றுமையை சிதைக்க நினைத்தது பாஜ. தெற்கு வடக்கு என பிளவுபடுத்தும் ஆபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இந்திய நாடாளுமன்றம் பிஜேபிக்கு மரண அடியை தந்திருக்கிறது. இது முதல் வெற்றி.
பாஜவுடன் கூட்டணி அமைத்தபோதே எடப்பாடி அதிமுகவுக்கு சமாதி கட்டிவிட்டார் என அக்கட்சியினர் சொல்வதை கேட்க முடிகிறது. தற்போது நடக்கிற தேர்தல் அரசியல் போர். நம்முடைய முதல்வர் ஜனநாயக சிந்தனையாளர். 200 இடங்கள் வென்றால் போதும் என நினைத்தார். ஆனால் தற்போதைய நிலையை பார்த்தால் மீதமுள்ள இடங்களை கூட அதிமுக பாஜ வெற்றி பெற முடியாது என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
