பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு; தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நின்றபடி வாகனங்களிடம் லிப்ட் கேட்கும் போலீஸ்

மதுராந்தகம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளது. இந்த பகுதியில் தற்போது தேர்தலை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு பணியில் ஈடுபடும் போலீஸ்காரர் ஒருவர் தனது பணி நேரம் முடிந்ததும் மதுராந்தகத்தில் இருந்து திண்டிவனம் செல்வதற்காக காலை 5 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை மறித்து லிப்ட் கேட்கின்றனர்.

அவ்வாறு கேட்கும்போது சட்டென்று வாகனங்களை நிறுத்துவதால் பின்னாடி வரும் வாகனங்கள் இடித்து விபத்து நடக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’சாலையோரம் நின்று லிப்ட் கேட்காமல் சாலையின் நடு பகுதிக்கு வந்து நின்று வாகனங்களை மறித்து லிப்ட் கேட்கின்றனர். இதனால் பெரிய விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர். ‘’இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருக்க உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர். நடுரோட்டில் நின்று வாகனங்களை மறித்து போலீசார் லிப்ட் கேட்கும் வீடியோவும் சமூகவலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: