×

நயினார் தொகுதியில் மோதல் சசிகலா வேட்பாளர் மீது கல்வீச்சு: பட்டா கத்தி, ஆயுதங்கள் பறிமுதல்; 50 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் சசிகலாவின் அஇபுதமமுக கூட்டணியில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி நிறுவனர் இசக்கிராஜா போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வெம்பக்கோட்டை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதனிடையே அந்த வழியாக இசக்கிராஜா உடன் வந்த நிர்வாகிகளின் கார் மீது மகாராஜன் தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விருதுநகர் மாவட்ட எஸ்பி நாதா சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று 2 நாட்களுக்கு முன்பும் இரண்டு கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Nainar ,Sasikala ,Pasumpon ,Makkal Desam Party ,Isakkaraja ,AIADMK ,Sattur ,Virudhunagar district ,Vembakottai ,BJP ,
× RELATED பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாஜக...