×

வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் மீது விசாரணை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுகவை சேர்ந்த ராயபுரம் வேட்பாளர் ஜெயக்குமார், மயிலம் வேட்பாளர் சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், குமாரபாளையம் வேட்பாளர் தங்கமணி, கோவை வடக்கு பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த மனுக்களில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேரும், பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனும் வேட்புமனுக்களில் தங்களின் சொத்து விவரங்களை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளனர். தங்களுக்கு உள்ள சொத்துகளை மறைத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,Chennai ,Jayakumar ,C.V. Shanmugam ,R.P. Udayakumar ,Dindigul Srinivasan ,Thangamani ,BJP ,Vanathi Srinivasan ,Income Tax Department ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக...