×

தேர்தல் நாளான வருகிற 23ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: தொழிலாளர் ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான தொழில் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 23ம் தேதி வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அலுவலர் மற்றும் உறுப்பினர்களான தொழிலாளர் இணை ஆணையர் (சென்னை) மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் – தொலைபேசி எண் 7904646090, 7299007334, தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம் – 7904802429, 9043555123) என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

Tags : Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Election Commission ,Tamil Nadu… ,
× RELATED தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக...