சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தங்கம் விலை வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.

அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13.600க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1,08,800க்கும் விற்பனையானது. மாலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 உயர்ந்து ரூ.1,13,760க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220 விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.265க்கும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,65,000க்கும் விற்பனையானது.. இதனையடுத்து நேற்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320 விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,14,880க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.14,360க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275க்கு விற்பனை ஆகிறது.

Related Stories: