×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த பையில் 12 கிலோ கஞ்சா

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த பையில் இருந்து 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நடைமேடை 2 மற்றும் 3க்கு இடையே உள்ள பகுதியில் கிடந்த ஒரு பையில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலம் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது சுமார் 12 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 6 லட்ச ரூபாய் என்று தெரிகிறது. அந்த கஞ்சாவை திருவல்லிக்கேணி உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சா கடத்திவந்தவர்கள் யார், எதற்காக போட்டுவிட்டு சென்றார்கள் என்று விசாரிக்கின்றனர்.

Tags : Perampur railway ,PERAMPUR ,PERAMPUR RAILWAY STATION ,Chennai Perampur railway station ,
× RELATED இ-மெயில் மூலம் நடிகை திரிஷா வீட்டிற்கு...