×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் சின்னம் அச்சிடப்பட்ட ஆவின் பொருட்கள் விற்பனை

திருவள்ளுர், ஏப்.12: திருவள்ளூரில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சின்னம் அச்சிடப்பட்ட ஆவின் பொருட்களின் விற்பனையை தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஒன்றியம், காக்களுர் ஆவின் பால்பண்னை வளாகத்திலுள்ள விற்பனையகத்தில் `தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா’ சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிறுவனம் இணைந்து, ஆவின் பொருட்களில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளுர் மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு சின்னம் (மாஸ்காட்) அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு சின்னம் அச்சடிக்கப்பட்ட ஆவின் பொருட்களின் விற்பனையை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும், ஆவின் பொருட்களை விநியோகிக்கும் வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டியும், 200க்கும் மேற்பட்ட ஆவின் பால் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் (ஆவின்) பொது மேலாளர் சிவகுமார், உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ந.இளங்கோவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Aavin ,Thiruvallur ,Election Officer ,M. Pratap ,Kakkalur, Tiruvallur ,Union ,Poonamalli Assembly ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தபால்...