×

பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

மாதவரம், ஏப்.11: சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் எம்.ஆர்.நகர் சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சசிகுமார் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தப்போது ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் சிக்கியது. விசாரித்ததில், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையை சேர்ந்த கமலேஷ் குமார்(21) என்பதும், ஸ்கிராப் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க வீட்டிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பரிமுதல் செய்து பெரம்பூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Flying squad ,Madhavaram ,Election Flying Squad ,Officer ,Sasikumar ,Kodungaiyur M.R. Nagar ,Perambur ,Chennai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தபால்...