உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் விழா

மதுரை, ஏப். 11: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 205வது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி நடந்தது. உலகத் தமிழ்ச் சங்க துணைத்தலைவர் மற்றும் இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். அவர் பேசியதாவது, ‘‘இலக்கியங்களைத் தொகுத்தவர்கள் ஆங்காங்கே எழுதி வைத்ததைத் தொகுத்திருக்கிறார்கள். ஒருமைப்பாட்டின் அடிப்படையில் தொகுத்திருக்கிறார்கள். இல்லையெனில் தொகைநூல் வர வாய்ப்பில்லை.

உலகிற்கு நாகரீகத்தைச் சொல்லிக் கொடுக்கும் மரபு இருந்திருக்கிறது. உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி’’என்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தூரன், புறநானூற்றில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்ற தலைப்பில் தமிழ்க்கூடலுரை ஆற்றினார். மேலும், இந்நிகழ்ச்சியில், தமிழறிஞர்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: