×

ஆசிய பேட்மின்டன் அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி

நிங்போ: பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி அபார வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் நிங்போ நகரில் பேட்மின்டன் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி, இந்தோனேஷிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.

முதல் செட்டில் இரு வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பெறுவதில் முனைப்பு காட்டினர். கடைசியில் அந்த செட்டை, 23-21 என்ற புள்ளிக்கணக்கில் ஆயுஷ் போராடி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் ஆயுஷ் கை ஓங்கிக் காணப்பட்டது. அந்த செட்டை 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய ஆயுஷ் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதிச் சுற்றுப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவ், தைவான் வீரர் சோ டியன் சென் உடன் மோதினார். அப்போட்டியில் முதல் செட்டை 21-16 என்ற புள்ளிக் கணக்கில் லோ கைப்பற்றினார். இருப்பினும் அடுத்த இரு செட்களில் சுதாரித்து சிறப்பாக ஆடிய சோ டியன், 21-12, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற சோ டியன் அரை இறுதிக்கு முன்னேறினார்.

Tags : Aayush Shetty ,Ningbo ,Badminton Asia Championships ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு...