- பெங்களூர்
- ராஜஸ்தான்
- குவஹாத்தி
- ராஜஸ்தான் ராயல்ஸ்
- ராயல் சேலஞ்சர்ஸ்
- பெங்களூர்
- லீக் போட்டியில்
- ஐபிஎல்
- அசாம்
கவுகாத்தி: ஐபிஎல் தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 16வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்- நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மோதுகின்றன. முதல் 3 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ள ராஜஸ்தான் பட்டியலில் டாப்பில் உள்ளது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (170 ரன்), 15 வயது இளம்புயல் சூர்யவன்ஷி( 122ரன்) அதிரடியில் மிரட்டுகின்றனர். துருவ் ஜூரல், கேப்டன் ரியான் பராக், ஹெட்மியர் மிடில் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர்.
பவுலிங்கில் ஆர்ச்சர்,, ரவி பிஸ்னாய்(7 விக்கெட்), சந்தீப் சர்மா சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இன்று வெற்றியை தொடரும் முனைப்பில் களம் இறங்குகிறது. மறுபுறம் நடப்பு சாம்பியன் பெங்களூரு முதல் 2 போட்டியிலும் வென்ற நிலையில் இன்று வெற்றியுடன் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பில் சால்ட் 2 போட்டியிலும் அதிக ரன் எடுக்காவிட்டாலும் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், கேப்டன் ரஜத் படிதார். டிம் டேவிட் , ஜித்தேஷ்சர்மா என அதிரடி பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் டப்பி, புவனேஸ்வர்குமார், குருணல் பாண்டியா கைகொடுக்கின்றனர். இரு அணிகளும் இதற்கு முன் 33 முறை மோதி உள்ளன. இதில் ஆர்சிபி 17, ராஜஸ்தான்14ல் வென்றுள்ளன. 2 போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் இங்கு நடந்த 2 போட்டியிலும் ராஜஸ்தான் வென்றுள்ள நிலையில் கூடுதல் நம்பிக்கையில் களம் இறங்குகிறது.
