* ஆஸ்டன் வில்லா அபார வெற்றி
பொலாக்னா: ஐரோப்பா லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, ஆஸ்டன் வில்லா – பொலாக்னா அணிகள் மோதின. துவக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஆஸ்டன் வில்லா அணியின் எஸ்ரி கோன்ஸா 44வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அசத்தினார். அவரைத் தொடர்ந்து, அந்த அணியின் ஒல்லி வாட்கின்ஸ், 51 மற்றும் 90+4வது நிமிடங்களில் இரு கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார். போலாக்னா அணியின் ஜோனாதன் ரோவ் 90வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதனால், 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா வெற்றி பெற்றது.
* ஜூனில் களமிறங்கும் மெஸ்ஸி அணி
டெக்சாஸ்: உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் 12ம் தேதி முதல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற உள்ளன. இதையொட்டி, நடப்பு உலக கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினா, நட்பு ரீதியிலான வார்ம்அப் போட்டிகளில் ஆடவுள்ளது. வரும் ஜூன் 6ம் தேதி ஹோன்டுராஸ் அணியுடன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி விளையாடும். அதன் பின், ஐஸ்லாந்து அணியுடன் அலபாமாவில் உள்ள ஆபர்ன் நகரில், ஜோர்டான் ஹேர் ஸ்டேடியத்தில் மோதவுள்ளது. இத்தகவலை அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு தெரவித்துள்ளது.
