×

தேர்தல் புகார்களை பார்வையாளர்களை சந்தித்து தெரிவிக்கலாம்

ஊட்டி, ஏப். 10: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான புகார்களை பார்வையாளர்களை சந்தித்து தெரிவித்து கொள்ளலாம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி தொகுதி பொது பார்வையாளர் தான்வி சுந்த்ரியல் – 8072843589, கூடலூர் தொகுதி பார்வையாளர் ஹரீஷ் – 8248203626, குன்னூர் தொகுதி பார்வையாளர் சுஹாஸ் – 8610565434, காவல் பார்வையாளர் லதா மனோஜ் – 9080130347, செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள் ஊட்டி தொகுதி கஜேந்திர சிங் – 6381895641, கூடலூர் தொகுதி வைபவ் மாதவ் ராவ் – 6380131373, குன்னூர் தொகுதி அஜித் டான் – 6380677984 ஆகிய எண்களில் பொதுமக்கள்,

அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களை ஊட்டி தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரில் சந்தித்து மனுக்கள் வழங்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

 

Tags : Ooty ,Nilgiris district ,Tamil Nadu Assembly ,
× RELATED பர்கூர் மலை கிராமத்தில் காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்