×

‘‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்…’’

குன்னூர் வி.பி. திடலில் தவெக சார்பில் நேற்று வாகன பிரச்சாரம் நடைபெற்றது.கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்து, பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேசி பழகிய நாஞ்சில் சம்பத்திற்கு, குன்னூர் கூட்டம் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.வழக்கமாக இவரது பேச்சைக் கேட்கத் திரளும் கூட்டத்தைப் போலன்றி, நேற்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சுமார் 80 பேர் மட்டுமே வந்திருந்தனர். இந்தச் சிறிய கூட்டத்தைப் பார்த்து நாஞ்சில் சம்பத் அதிர்ச்சிக்குள்ளானார். ‘‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’’ என்கிற பாணியில் உற்சாகமின்றிப் பேசிய அவர், தனது அதிருப்தியை முக பாவனைகளிலேயே வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் தவெகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Tags : Thaveka ,Coonoor V.P. ,Nanjil Sampath ,Coonoor… ,
× RELATED மஞ்சள் ஆராய்ச்சி மையத்திற்கான நிதி ரூ.36 கோடி வரவில்லை