×

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் முட்டைகோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

கோத்தகிரி, ஏப்.9: மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், இங்கிலீஸ் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.  இந்நிலையில் மலை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் மூன்றரை மாத பயிரான முட்டைகோஸ் பயிரிடுவர்.

தற்போது சீதோஷண நிலை முட்டைகோஸ் பயிரிட ஏற்றதாக உள்ளதால் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பில்லிக்கம்பை, ஈளாடா, கதகட்டி, எஸ்.கைக்காட்டி, நெடுகுளா அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் உரம், தண்ணீர், மருந்துகள் தெளித்து பயிரிடப்பட்டுள்ள முட்டைகோஸ் பயிர்களை பராமரித்து அறுவடைக்கு நன்கு தயார்படுத்தி வருகின்றனர். இதனால், அறுவடையின் போது நன்கு விளைச்சல் இருக்கும் எனவும், விலைக்கு ஏற்றார் போல் விலை விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Tags : Kotagiri ,Nilgiris ,
× RELATED கோவை மாவட்டத்தில் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு