×

மஞ்சள் ஆராய்ச்சி மையத்திற்கான நிதி ரூ.36 கோடி வரவில்லை

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று மொடக்குறிச்சியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: இந்தியா முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கிடைப்பது இல்லை.இந்தத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசுதான் தீர்மானிக்கிறது.

ஆண்டுக்காண்டு இதற்கான நிதியை குறைத்து வருகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறினேன். தற்போது அந்தத் திட்டத்தையே எடுத்து விட்டனர். அதற்கு வேறு பெயர் வைத்து 150 நாள் வேலைத்திட்டம் என கூறுகின்றனர். ஆனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 30, 40 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை. இதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது ஒன்றிய அரசுதான். எனவே இப்பகுதியில் போட்டியிடும் பாஜ., வேட்பாளர் பிரசாரத்திற்கு வரும்போது நேரடியாகவே இத்திட்டம் குறித்து கேள்வி எழுப்புங்கள். தமிழக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த பகுதியில் கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விளைவித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி எடுத்து விட்டனர் இதுவரை மஞ்சள் ஆராய்ச்சி மையத்திற்கான நிதி வரவில்லை. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டத்தை பாஜ., எம்எல்ஏ சொந்த தொகுதியில் செயல்படுத்த முடியவில்லை. ஜனநாயகம் ஜெயிக்க வேண்டும். சமூகநீதி ஜெயிக்க வேண்டும். மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் எதிரான போட்டி,ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags : Yellow Research Centre ,Duri Waiko ,India ,EU ,
× RELATED ‘‘எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்…’’