பெ.நா.பாளையம், ஏப்.10: துடியலூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென காற்றுடன் மழை பெய்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை துடியலூர், நரசிம் நாயக்கன்பாளையம், சின்ன தடாகம், உட்பட பல பகுதிகளில் நேற்று மாலை 1 மணி நேரம் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த பல நாட்களாக வெய்யில் சுட்டெரித்து வந்தது.
இந்நிலையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மழையுடன் காற்றும் வீசியதால் சில இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தது. இந்நிலையில் திடீரென பெய்த மழையால் இதமான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
