காரமடை, ஏப்.8: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம்,காரமடை,சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்,தொழில்துறையினர்,பல்வேறு சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு கோரி வந்தார்.
நேற்று திமுக வேட்பாளர் எஸ்.எம்.டி.கவிதா கல்யாண சுந்தரம் காரமடை ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின்னர் தனது பிரச்சாரத்தை துவக்கினார்.தொடர்ந்து காரமடை கார் ஸ்டாண்ட்,பில்லுக்கடை முக்கு, பெள்ளாதி சாலை,காந்தி சிலை என காரமடை நகரின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கோவை மாவட்டத்தில் முதல் பெண் வேட்பாளரான நான் ஜெயித்தால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களும் ஜெயித்த மாதிரி. மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் கோரிக்கைகள் குறித்து எந்நேரமும் மக்கள் என்னை அணுகும் வகையில் எனது வீட்டின் அருகிலேயே அலுவலகம் அமைத்துள்ளேன். உங்கள் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் செய்து தர எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், காங்கிரஸ் கட்சி கோவை வடக்கு மாவட்ட தலைவர் அறிவு என்கிற ரங்கராஜ்,மதிமுக மாவட்ட செயலாளர் பி.என்.ராஜேந்திரன்,உயர் மட்ட குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி,சிபிஐ மாவட்ட செயலாளர் சிவசாமி,திமுக நகர செயலாளர்கள் குரு பிரசாத்,அஷ்ரப் அலி, அறிவரசு,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம்,சுரேந்திரன், பிரதீப்,காந்தி சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார்,காரமடை நகராட்சி தலைவர் உஷா,முன்னாள் நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
