×

கடந்த 11 ஆண்டுகளில் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளன: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: “11 ஆண்டுகளில் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் எக்ஸ் பதிவில், “பிரதமர் மோடியால் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான, 58 கோடிக்கும் அதிகமான பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் சிறு வணிகர்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு பிணையில்லாத கடன்களை அளித்து, சுய வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில்களுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. மேலும், இதன் மூலம் 12 கோடி இளைஞர்கள் பயனடைகிறார்கள். இவர்கள் தன்னம்பிக்கை மிக்க இந்தியாவை கட்டி எழுப்பும் பயணத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Tags : Mudra Yojana ,Amit Shah ,New Delhi ,Union Minister ,Union Home Minister ,Modi ,
× RELATED கேரளா, அசாம், புதுச்சேரிக்கு இன்று...