×

சாரதா நிதி நிறுவன மோசடியில் முக்கிய குற்றவாளி சென்னுக்கு ஜாமீன்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாரதா குழும உரிமையாளர் சுதிப்தா சென் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு வழக்குகளை தவிர இதர வழக்குகளில் அவர் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடைசி இரண்டு வழக்குகளில் நேற்று அவருக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நிதி முறைகேடுகள் அம்பலமானதை அடுத்து, 2013-ம் ஆண்டு சுதிப்தா சென் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Calcutta High Court ,Sen ,Kolkata ,CBI ,Saradha Finance Company ,Saradha Group ,Sudipta Sen ,
× RELATED கேரளா, அசாம், புதுச்சேரிக்கு இன்று...