இம்பால்: மணிப்பூரின் பிஷ்ணுபூரில் வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் பலியானார்கள். மேலும் அவர்களின் தாய் காயமடைந்தார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இரவு முழுவதும் நீடித்த மோதல்களுக்கு நேற்று காலை புதிதாக எந்த வன்முறையும் பதிவாகவில்லை. அமைதியான சூழலே நிலவியது.
