×

பூத் எண்ணிக்கையை மறந்த மேற்குவங்க தேர்தல் பார்வையாளர் அதிரடி நீக்கம்

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தல் பார்வையாளர் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொகுதியின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை கூறத்தவறியதால் அவரை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியது. மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் தக்ஷின் சட்டமன்றத் தொகுதியின் பொதுப் பார்வையாளராக அனுராக் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தொடர்பு கொண்டு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை குறித்து கேட்டுள்ளார். அப்போது அனுராக் யாதவுக்கு சரியாக கூறத்தெரியவில்லை. பல நிமிடங்களுக்குப் பிறகே, கூச் பெஹார் தக்ஷின் தொகுதியில் மொத்தம் 125 வாக்குச்சாவடிகள் உள்ளதாக அவர் பதிலளித்தார்.

அனுராக் யாதவின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த தலைமைத் தேர்தல் ஆணையர், அவரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும் தேர்தல்களைச் சீராக நடத்துவதற்கு, தேர்தல் பார்வையாளர்களின் திறமையும், அவர்கள் பொறுப்பேற்றுள்ள தொகுதியின் விவரங்கள் குறித்த முழுமையான அறிமுகமும் மிக அவசியமானவை என்று அவர் தெரிவித்தார். மேற்குவங்க மாநிலத்தில் கூச் பெஹார் தக்ஷின் தொகுதியில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Tags : West Bengal ,Kolkata ,Election Commission ,Anurag Yadav ,Cooch ,Behar ,Dakshin ,
× RELATED நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த...