×

கட்சிக்காரர்களிடம் சாப்பாட்டை வாங்கி திங்காதீங்க..

போலீஸ், துணை ராணுவத்தினருக்கு கண்டிப்பு புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் உள்ள 1099 வாக்குசாவடிகளில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்களுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

இதில் சட்டம், ஒழுங்கு சீனியர் எஸ்.பி கலைவாணன் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து செல்லும்போதும், வாக்குச்சாவடியில் இயந்திரங்கள் வைத்து பிறகும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, இன்று (நேற்று) இரவு வாக்குசாவடியில் 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் மாறி, மாறி காவலர்கள் பாதுகாக்க பணியில் இருக்க வேண்டும். அப்போது, பணியில் இருந்த வீரர்கள் தூங்கி விட்டார்கள் என்று ஏதேனும் தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், வாக்குச்சாவடிக்கு உள்ளே அமைச்சர், எம்எல்ஏவுடன் பாதுகாப்பு காவலர்கள் செல்ல அனுமதி கிடையாது. மேலும், அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நாளை (இன்று) அதிகாலை ஒருமுறை அனைத்து வாக்குசாவடி அருகே போஸ்டர் அல்லது நோட்டீஸ் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடியில் இருந்த 100 மீட்டர் வரை எந்தொரு பிரசாரம், ஸ்பீக்கர் பயன்படுத்த அனுமதி கிடையாது.

வாக்குசாவடியில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினருக்கு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்த உணவு பொருட்களை வாங்க வேண்டாம். ஒவ்வொரு வாக்குசாவடியில் ஒரு காவலர் அல்லது ஐஆர்பிஎன், ஊர்க்காவல் படை வீரர்கள் இருப்பார்கள். புதுவை முழுவதும் 144 தடை பிறக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு இடத்தில் 5 பேருக்குமேல் கூட்டமாக நிற்கக்கூடாது’ என்றார்.

Tags : Puducherry Assembly ,Puducherry ,Korimedu Police ,Ground ,
× RELATED நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த...