×

படிக்கும்போதே நண்பர்கள் குள்ளமான வாலிபரை மணந்த இளம்பெண்

திருமலை : படிக்கம்போதே நண்பர்களாக பழகிய குள்ளமான வாலிபரை இளம்பெண் திருமணம் செய்துகொண்டார்.ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்பந்த ஊழியராக ஷஷி (குள்ளமான மாற்றுதிறனாளி) பணிபுரிகிறார். கவுசினா ஒரு மருந்தாளராகப் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் படிக்கும்போது முதல் ஒன்றாக பழகி வந்ததால் ஒருவருக்கொருவர் புரிதல் கொண்டு நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இதுவே அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால் இவர்கள் திருமணம் செய்து கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். இதுகுறித்து தங்கள் குடும்பத்தில் இரு பெற்றோருக்கும் தெரிவித்தனர். ஷஷி குள்ளத்தன்மை கொண்டவர் என்பதால் கவுசினாவின் பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கவுசினா அவரைத் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தார். மேலும் மாற்று மதத்தை சேர்ந்த பெண் எவ்வாறு இந்து இளைஞரை திருமணம் செய்து கொள்ள முடியும் எனக்கூறி தடுக்க முயன்றனர்.

இதனால் இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் பாதுகாப்புக்காக இனுகுதுருபேட்டை காவல் நிலையத்தை அணுகினர். இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தினரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி திருமணம் செய்து வைத்து அனுப்பினர். இதன் மூலம் காதலுக்கு தோற்றம், அழகு, சாதி, மதம் அல்லது உயரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்துள்ளனர்.

Tags : SHASHI ,MACHILIPATNAM DISTRICT COURT ,AP ,STATE ,Gaucina ,
× RELATED நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிறப்பித்த...