*ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஸ்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேஷ்வர் தலைமையில் ரயில்வே திட்டப் பணிகள், ஸ்ரீசிட்டி இரண்டாம் கட்டம், எல்ஜி இரண்டாம் கட்டம், கொல்லடம், இருகுளம், ரலக்குப்பம், ஸ்பேஸ் சிட்டி முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டங்கள், நாயுடுபேட்டை இரண்டாம் கட்டம், வனேலூர், பகாலி, தேசிய நெடுஞ்சாலைகள், விசாகப்பட்டினம்-சென்னை வழித்தட குழாய் பணிகள், ஆசிய வளர்ச்சி வங்கி சாலைகள், துக்கராஜபட்டணம் பணிகள், கிருஷ்ணபட்டணம் துறைமுகம், ரயில்வே திட்டப் பணிகள், ஏபிஐஐசி, மற்றும் ஸ்ரீ சிட்டியில் எல்ஜி நிறுவனம் தொடர்பான நிலுவையில் உள்ள பல்வேறு நிலம் சார்ந்த கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இதில் இணை கலெக்டர் கோவிந்தராவ் திருப்பதி, நெல்லூர், சென்னை தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர்கள், ரயில்வே திட்ட அதிகாரி வாமனமூர்த்தி, தெற்கு ரயில்வே அதிகாரிகள், திருப்பதி, நெல்லூர் ஏபிஐஐசி மண்டல மேலாளர்கள் விஜய் பாரத் ரெட்டி, எல்.சிவகுமார், இந்த நீர்ப்பாசனம் தொடர்பான மண்டலங்களின் வட்டாட்சியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் வெங்கடேஸ்வர் பேசியதாவது: ஸ்ரீசிட்டி இரண்டாம் கட்டம், ஏபிஐஐசி எல்ஜி முதல், இரண்டாம், மூன்றாம் கட்டங்கள், கொல்லடம், இருகுளம், பெத்தேட்டிப்பாக்கம், ரலக்குப்பம், சிட்டி முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டடங்கள், நாயுடுபேட்டை இரண்டாம் கட்டம், வனெல்லூர், பகாலி ஆகிய திட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும்.
இத்திட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளும் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். இணை நிலம் தொடர்பான பிரச்னைகளை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திருப்பதி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் உள்ள தொகுப்பு 2,3,4 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளை, எந்தவொரு நிலுவைப் பிரச்னைகளும் இன்றி தரத்துடன் முடிக்க, வருவாய் கோட்ட அலுவலர்கள் தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
விமான நிலையம், இசர், கரகம்பாடி, எம்.ஐ.ஜி லேஅவுட் திம்மாஜிகந்திரிகா போன்ற இடங்களில் நிலுவையில் உள்ள நிலப் பிரச்னைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சாலை மற்றும் கட்டிடங்கள், பஞ்சாயத்து ராஜ் பொறியியல், நீர்ப்பாசனம், வனம், நீர்வளத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, நிலுவையில் உள்ள பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். ஏபிஐஐசி தொகுப்பு 5 மற்றும் ஏடிபி சாலைகளின் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.நரசிம்முலு, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி சூலூர்பேட்டை ஆர்டிஓக்கள் ராம்மோகன், பானுபிரகாஷ் ரெட்டி, தேவேந்திர ரெட்டி தனி துணை கலெக்டர்கள் பாரத் நாயக், அனுராதா, நிலம் மற்றும் சர்வே பதிவேடுகள் உதவி இயக்குனர் அருண்குமார், ஏபிஐஐசி, திருப்பதி மண்டல மேலாளர் விஜய் பரத் ரெட்டி, தாசில்தார் பக்வான், ஸ்ரீ நகர சம்மேளன துணை பொது மேலாளர் பக்வான், அலுவலர்கள் பாஸ்கர், சிவபிரசாத், சிரிஷா நிலம் கையகப்படுத்தும் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6 வழிச்சாலை பணிகளை முடிக்க உத்தரவு
விசாகப்பட்டினம்-சென்னை வழித்தட குழாய்வழிப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும். நாயுடுபேட்டை-ரேணிகுண்டா, ரேணிகுண்டா-கடப்பா-ரேணிகுண்டா முதல் சென்னை வரையிலான ஆறு வழிச்சாலைகளின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் வெங்கடேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.
