×

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 35 சவரன் நகைகள் பறிமுதல்

பூந்தமல்லி, ஏப்.7: தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை மடக்கி சோதனை செய்தபோது பையில் 35 சவரன் நகைகள் இருந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்ததில், மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த போராராம் (57) என்பதும், இவர் மதுரவாயல் பகுதியில் சொந்தமாக அடகு கடை மற்றும் நகை விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் போராராம் தனது கடையில் விற்பனை செய்வதற்காக போரூரில் உள்ள ஹேமாராம் என்ற நகை கடையில் இருந்து நகைகளை வாங்கி சென்றபோது தேர்தல் பறக்கும் படையினரிடம்‌ சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து, நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாததால் 35 சவரன் நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Poonamalli ,Tamil Nadu ,
× RELATED உணவு டெலிவரி ஊழியரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு: இரு வாலிபர்கள் கைது