×

தமிழகம் முழுவதும் ரூ.462 கோடி பணம், இலவச பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.462 கோடி பணம் மற்றும் இலவச பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் ரூ.92.07 கோடி ரொக்கம், ரூ.2.04 கோடி மதுபானம், ரூ.75.76 கோடி போதைப்பொருட்கள், ரூ.214.38 கோடி தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.78.49 கோடி இலவசபொருட்கள் என மொத்தம் ரூ.462.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட குறைதீர்ப்பு ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்ததை தொடர்ந்து, பொதுமக்களுக்கு எந்தவிதமான அலைக்கழிப்போ அல்லது சிரமமோ ஏற்படாதவாறு, பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.278 கோடி மதிப்பிலான பணம், இதரப் பொருட்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED வில்லிவாக்கத்தில் சுயேச்சை...