×

புதிதாக 6,35,911 பெயர்கள் சேர்ப்பு; தமிழகத்தில் இறுதி வாக்காளர்கள் 5,73,43,291 பேராக அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 6,35,911 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இறுதி வாக்காளர்கள் 5,73,43,291 பேராக அதிகரித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து, 7 ஆயிரத்து 380 வேட்பாளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேர் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 23ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியில் அதாவது, ஏப்ரல் 6ம் தேதி (நேற்று முன்தினம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, புதிதாக பெயர் சேர்க்க 6,35,911 பேர் விண்ணப்பம் செய்தனர். அதையும் சேர்த்தால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இறுதியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,80,30,658 பேரும், பெண் வாக்காளர்கள் 2,93,04,905 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 7,728 பேரும் உள்ளனர்.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,Election Commission of India ,
× RELATED வில்லிவாக்கத்தில் சுயேச்சை...