×

காரங்காடு செங்கோல் மாதா ஆலயத்தில் பாஸ்கு பெருவிழா கொண்டாட்டம்: ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தொண்டி: தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா ஆலயத்தில் 2 நாள் பாஸ்கு பெருவிழா நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்று காட்சிகளை பார்வையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் மிகவும் பழமையான, தூய செங்கோல் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்குப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, 131 ஆம் ஆண்டு பாஸ்குப் பெருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாடுகளின் பாஸ்கு தொடர்பான காட்சிகள் காரங்காடு மக்களால் நடித்து காண்பிக்கப்பட்டது.

விழாவின் 2ம் நாளான இன்று உயிர்ப்பின் பாஸ்கு சிறப்பாக நடித்து காண்பிக்கப்பட்டது. பங்கு தந்தை ரெமிஜியஸ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், சிவகங்கை மறை மாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை மக்கள் கலந்துகொண்டு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்று காட்சிகளை பார்வையிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் சேசு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Easter ,Karangadu Sengol Mata Temple ,Thondi ,2-day Easter festival ,Pure Sengol Mata Temple ,Karangadu ,Jesus Christ ,Ramanathapuram district ,Thiruvadana… ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான...