×

காரைக்குடி ராமலிங்கம் சவுடாம்பிகையம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கத்தி போடும் விழா

 

காரைக்குடி: காரைக்குடி ராமலிங்கம் சவுடாம்பிகையம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கத்தி போடும் விழா நடைபெற்றது. காரைக்குடியில் உள்ள ராமலிங்க சவுடாம்பிகையம்மன் கோயில் 79வதுஆண்டு பங்குனி பொங்கல் விழா மற்றும் கரக உற்சவ விழா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று முத்தாலம்மன் கோயிலில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி நீர் எடுத்து ஊர்வலமாக சென்று ராமலிங்க சவுடாம்பிகையம்மன் கோயிலில் சேர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது. முத்தாலம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Tags : Karaikudi Ramalingam Chaudambikayamman Temple ,Panguni Pongal festival ,Karaikudi ,Karaikudi Ramalingam Chaudambigyamman ,Temple ,Bhanguni Pongal Festival ,annual ,Karaka Enthusiasm Festival ,Ramalinga Chaudambikamman Temple ,
× RELATED திருக்குறுங்குடியில் பங்குனி...